பிரியமானவனே உன்
ஆத்துமா வாழ்வது போல் நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)
1.
வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொருப் போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்துப் போராடி வெற்றி பெறு – பிரியமானவனே
2.
பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களூம் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே – பிரியமானவனே
3.
ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே (ளே)
நெருங்கி வரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே(ளே) – பிரியமானவனே